“யோகி வந்தால் கலவரம்; மோடி வந்தால் ஐ.டி ரெய்டு; இதுவே பா.ஜ.கவின் அரசியல் கலை “ - ப.சிதம்பரம் சாடல்!

 


“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா என பா.ஜ.க தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் தமிழகத்திற்குப் படையெடுக்கின்றனர். அவர்கள் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. மோடி வந்தவுடன் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது. இது பா.ஜ.வுக்குக் கைவந்த கலை. வருமான வரித்துறையினர் சோதனையில் பணமே கிடைக்கவில்லை என்றால் அது எவ்வளவு மோசமான நடவடிக்கை.