நோன்பு வைப்பது எப்படி?

 


நோன்பு என்பது உடல் நலத்திற்கும் சிறந்தது தான் ஆனால் நேன்பை பலரும் தவறாக கையாளும்போது 30 நோன்புகள் இடையிலேயே நோயாளிகளாக ஆகும் சூழல் ஏற்பட்டு விடுகின்றது 

அதாவது சளி பிடித்தல் வயிற்றுப்போக்கு இருமல் இவ்வாறு பல தொந்தரவுகள் ஆளாகி சில நோன்புகளை விட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்

பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பு திறந்த உடனேயே சர்பத் ரோஸ் மில்க் பாதாம் மில்க் என்று இதுபோன்ற கூல்டிரிங்ஸ் மீது தான் பலருக்கும் விருப்பம் உண்டாகும் அதை எடுத்து உடனே மடக் மடக் என்று குடித்து விடுவார்கள் அதுவும் மிகவும் கூலாக இருந்து குடித்தால் உடனே நமக்கு சில நாட்களில் சளி பிடிக்க வாய்ப்பாகும்

நன்னாரி சர்பத்துகளை குடிக்கலாம் அதுவும் குறைவான அளவில் அதிக கூலிங் இல்லாமல் இருந்தால் நல்லது அதேபோல் நோன்பு திறந்த உடனேயே சம்சா வடை பஜ்ஜி என கடைகளில் இருந்து வாங்கி வரப்படுபவைகளை அதிகம் சாப்பிட்டு நோன்பு திறப்பதும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 1 & 2 உளுந்தவடைகள் போதுமானது 

நோன்பின் ஆரம்ப நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அதிகமாக நோன்பு திறந்ததும் உண்பது தலைச்சுற்றலை ஏற்படுத்தும் உடல் வலியை ஏற்படுத்தும் கண்களைக் கட்டிக்கொண்டு தூக்கம் வருவது போல் இருக்கும் எனவே எந்த அளவிற்கு குறைவாக சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும் அதன் பிறகு இரவில் பசி எடுத்தால் பத்து மணிக்கு மேல் குறைவான அளவில் டிபன் சாப்பிடலாம்

சஹர் நேர உணவிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அப்போதும் அதிக மசாலா அதிக காரத்தன்மை அதிக எண்ணெய் ஆகியவைகள் உள்ள உணவுகளை 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அளவுடன் உண்பது ஏற்றது காரணம் சிலருக்கு நெஞ்செரிச்சல் வேறு வேறு பிரச்சனைகளை சஹர் முடிவு நேரத்தில் ஏற்படுத்தும் அப்போது மிகவும் சிரமமாக இருக்கும் எப்போதுமே 45 வயதைக் கடந்தவர்கள் கறியை குழம்பாக சாப்பிடுவதுதான் அவர்களுக்கு நல்லது

சஹர் நேரத்தில் மீன் உணவுகளை சாப்பிடும் போது மட்டும் தயிரை தவிர்ப்பது நல்லது

சஹர் நேரத்தில் ஓரளவுக்காவது  பசி எடுக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்  பசி எடுத்து சஹர் உணவை சாப்பிடும்போதுதான் அது  உடலுக்கும் அது ஏற்றதாக இருக்கும் உடல் நன்றாக செயல்பட்டால்தான் மனதும் நன்றாக செயல்படும் இபாதத்துகளை  சிறப்பாக செய்ய ஏதுவாகும்-Mylai Kamarudeen

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்