வாக்களிக்க வந்த இளைஞர் ஏமாற்றம்... ஏற்கனவே வாக்கு பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி...

 


திருச்சி உறையூர் குறத்தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் உறையூர் செட்டித் தெருவை சேர்ந்தவர்களுக்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது, இன்று காலை முதல் எந்தவித பிரச்சினையும் இன்றி வாக்குபதிவு நடைபெற்று வந்த நிலையில் செட்டித்தெரு பகுதியில் வசித்து வரும் ஹரிஹரன் வாக்களிக்க வந்தார்.

அப்போது உங்களது வாக்கு ஏற்கனவே பதிவாகி உள்ளது அதனால் நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் கூறியதை அடுத்து ஹரிஹரன் அதிர்ச்சி அடைந்தார். தான் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு தற்போதுதான் வருவதாகவும் தனது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருக்கிறது என்றால் எப்படி சாத்தியம் என்று ஏமாற்றத்துடன் அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்

வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் பெயர் இருந்தும் வாக்களிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு தான் ஆளாகியிருப்பதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.