லட்சியத்தை நோக்கிப் படித்தால் நினைத்ததை அடைய முடியும்"- ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ்.

 


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராமநாதன் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றார். 

வெற்றி பெற்ற பின்பு பயிற்சிக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் சென்று பயிற்சியை மேற்கொண்ட பின்பு தற்போது தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து தனது சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரியை நேரில் சந்தித்து மரக்கன்று கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.அவருடன் தாய்,தந்தை ஆகியோரும் மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஐஸ்வர்யா இராமநாதன், "தனது சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்தின் ஆட்சியரைச் சந்தித்து ஆசிப்பெற வந்ததாகவும், அவரின் அறிவுரைகளை ஏற்று சிறப்பாகப் பணி புரிய பாடுபடுவேன். இளம் பெண்ணாக தான் சாதித்தது போல தமிழகத்தில் பெண்கள் இளமையில் கல்வி கற்கும் போதே தங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணித்து படித்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று நினைத்து அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் பெண்கள் எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த துறைக்கு அவர்களால் செல்ல முடியும்" என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)