அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் ஐடி ரெய்டு!

 


ஈரோடு மாவட்டம் தோப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாள்களில் நடைபெற இருக்கிற நிலையில், கடந்த சில நாட்களாகவே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளி அதிமுகவைச் சேர்ந்த 13 பேருக்கு சொந்தமானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும்படையினரும் இப்பள்ளியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு