முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பணப்பட்டுவாடா

 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துகொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த வீடியோ வைரலாகிவருகிறது.

குன்னூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்க்கு அழைத்து வந்த மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 6 -ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடலூர், குன்னூர், உதகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வருகை தந்தார்.

 முதலில் கூடலூர் வேட்பாளரை ஆதரித்து கூடலூரிலும், குன்னூர் வேட்பாளர் மற்றும் உதகை பாஜக வேட்பாளரையும் ஆதரித்து குன்னூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின் அனைவருக்கும் 200 ரூபாய் வீதம் வழங்கியும் வாகனத்திற்க்கு தனியாகவும் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.