இந்தியாவை பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு பலியாக்கி விடாதீர்கள்; ராகுல் காந்தி விமர்சனம்..

 


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும். மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பாகுபாடு கொண்டது, உணர்வற்றது. ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு நழுவிவிட்டது. எவ்வாறு இதுபோன்ற தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு அனுமதிக்கலாம். இதற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். லாபம் ஈட்ட கூடாது.

மக்களுக்கு சேவை செய்யும் இந்த பணியில் யாரும் லாபம் ஈட்ட கூடாது. ஒரு தேசம், ஒரு தடுப்பூசி விலை என்று நாங்கள் கூறுவதற்கு பதிலாக, ஒரு தேசம், ஒரு தடுப்பூசிக்கு 5 விலை என்று மத்திய அரசு கொண்டு வந்தமைக்கு மத்திய சுகதாாரத்துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும். சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு தடுப்பூசி மூலம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 100 கோடி லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு