அமெரிக்காவில் வீசிய திடீர் புயல்..

 


அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் நேற்று முன் தினம் அதிகாலை திடீரென கடும் புயல் தாக்கியது. இதில், லூயிஸியானா மாகாணத்தைச் சோந்த 2 பேர் உயிரிழந்தனர்.

மிஸிஸிப்பி மாகாணத்தில் புயல் சீற்றம் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் போக்குவரத்து தடைபட்டதுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

புளோரிடா மாகாணத்தில் கடும் புயல் சீற்றத்துக்கு ஏராளமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புளோரிடாவின் பென்சகோலா நகரில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. எனினும், இது புயலால் ஏற்பட்டது என்பதை தேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அப்பகுதியில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதாக அது தெரிவித்துள்ளது. 

மேலும், பென்சகோலா செய்தி நிறுவனம் 13 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டதாக கூறியுள்ளது. சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image