நடிகர் விவேக்கின் இறுதிப் பயணம்

 


மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறியதாவது:

நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். கொண்டுவரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம். எக்மோ செய்தபிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழக்க நேர்ந்துள்ளது. பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகளுக்குப் பலன் இல்லை. இந்த உடல்நலப் பிரச்னை ஒரே நாளில் வராது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாக அவர் தரப்பில் சொன்னார்கள் என்று கூறினார்.

நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்! கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி.


கொரானா தடுப்பூசியால் பல மரணங்கள் தொடர்ந்து சம்பவிக்கிறது என்பதை சென்ற அறம் பதிவிலும் எழுதி இருந்தோம். சமீபத்தில் ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா, பெரம்பலூரில் அரசு டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கொரானா தடுப்பூசியால் மரணமடைந்தார் என்பதை பல ஊடகங்கள் மறைத்தன! அதே போல விவேக் விஷயத்திலும் மறைக்கிறார்கள். நடிகர் மன்சூன் அலிகான் தான் இதை துணிச்சலாக போட்டு உடைத்தார். அவருக்கு ஒரு சல்யூட்! 


அதற்குப் பிறகு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சமாளித்து சப்பை கட்டினாலும் உண்மை எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. கொரானா தடுப்பூசியால் ரத்தம் உறையும் பிரச்சினைகள் ஏற்கெனவே பலருக்கு ஏற்பட்டது தான். அப்படி ரத்தம் உறைந்தால் மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது என்பதை எப்படி மறுப்பீர்கள்! ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவது இதயம் தானே!


இந்தியாவில் கோவிஷீல்டு தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர,ஆஸ்டிராசென்கா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றாலும் இரத்தம் உறையும் தன்மை பலருக்கு ஏற்ப்பட்டுள்ளது! இந்தக் காரணத்தால் மேற்படி ஆய்வுக்காக இவ்விரண்டு தடுப்பூசிகள்  சில நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவியலின் பெயரால் அபத்தங்களை நடைமுறைப்படுத்தாதீர்கள்.


கொரானா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் இந்தியாவில் கொரானா பரவல் அதிகமாகி வருகிறது. மருத்துவர்களிலேயே 60 சதவிகிதமானவர்கள் இதை போடவில்லை.ஆனால், முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு போடுகிறோம் என்று சொல்லி அந்த எளிய உழைப்பாளிகளை முன்களப் பலியாடுகளாக்கி வருகிறீர்கள்.


கொரானா தடுப்பூசி மூலமாக இங்கு ஒரு ஆபத்தான அரசியல் நடத்தப்படுகிறது. அதன் மூலம் பாஜகவும், மோடியும் ஹீரோ இமேஜை கட்டமைக்க துடிக்கிறார்கள்! இதற்கு நடுவில் அந்த தடுப்பூசியால் எத்தனை பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், எவ்வளவு ஆபத்துகள் நிகழ்ந்தாலும் அதை மறைத்தும், புறக்கணித்தும் இத்தனை கோடி பேருக்கு போட்டுவிட்டோம் என்பதை அறிவிப்பதில் தான் குறியாக உள்ளார்கள்!


முதல் நாள் விவேக்கை வைத்து கொரனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வாக அவர் ஊசி போட்டுக் கொண்ட நிகழ்வை விளம்பரப்படுத்தினார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்கள். விவேக்கிற்கு நடந்தது வெளிப் பட்டுவிட்டது. மற்றவர்கள் விஷயம் வெளியே தெரியப் போவதில்லை. 


நண்பர் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் ஒரு சம்பவம் சொன்னார். அவரது நண்பர் மனைவி தடூப்புசியை போட்டு வந்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக இரவும், பகலுமாக தூங்கி வழிகிறார்! அவரால் எழுந்து நடமாட முடியவில்லை! இது போல சிலருக்கு முகம் வீங்கிவிட்டது. கை, கால்கள் சோர்ந்து படபடப்பு அதிகமாவதாக சொல்கிறார்கள்!


தடுப்பூசி போட்டாலும் கொரானா வருகிறதே.. என்றால்..வரும் ஆனால், ஆபத்துகள் குறையும், பாதிப்புகளை குறைக்கும் என்று வாதம் வைத்தார்கள்!


 ஆனால், அதுவும் பொய் என்பது டாக்டர் பாஷா (Dr.pasha, anaesthaesist) மூலம் நிருபணமாகிவிட்டது. ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா காவேரி மருத்துவமனையில் இரண்டு கட்டமாக கொரனா தடுப்பூசி போட்ட பிறகு அவருக்கு கொரானா வந்தது. அவர் இறந்துவிட்டார். அதே போல பெரம்பலூரில் அரசு மருத்துவர் தர்மலிங்கம் இறந்துள்ளார். கொரானா தடுப்பூசி வந்த பிறகு இந்தியா முழுமையிலும் டாக்டர்கள் பலரே இறந்துள்ளனர் என்ற உண்மைகளை இன்னும் கூட விரிவாக விவாதிக்க முடியும்.


இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானே அரசாங்கம் எந்த பக்க விளைவு ஏற்பட்டாலும் நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம் என்றும், நஷ்ட ஈடு தரமாட்டோம் என்றும் கூறிவிட்டது. இப்படி சொல்லி இருக்காவிட்டால் தற்போது நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும், ஆயிரக்கணகான பாதிப்புகளுக்கும் நஷ்ட ஈடு தந்தே அரசு கஜானா காலியாகி இருக்கும்.


இந்தச் சுழலில் வீடுவீடாக கார்ப்பரேஷன் ஆட்களை அனுப்பி கொரானா தடுப்பூசி போட வாருங்கள் என நிர்பந்திக்கலாமா..? இது தொடர்பாக நமது வாசகர்கள் பலர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த கார்ப்பரேஷன் ஊழியர்களோடு விவாதித்து, அனுப்பி வைப்பதற்கு நாளும், நாளும் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்! இதற்கு பின் ஏதாவது கமிஷன் உள்ளதா..? பொருளாதார அனுகூலம் உள்ளதா என்று தெரியவில்லை.


கொரானா ஆபத்து என்பதன் பேரால் மெரீனா கடற்கரையை பூட்டுகிறீர்கள். இதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்திற்கே நீங்கள் பூட்டு போடுகிறீர்கள். நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், யோகாசனம், பிராயாணம்,உடற்பயிற்சி செய்பவர்கள், காற்று வாங்கி மனதை லேசாக்கி செல்பவர்கள், சூரியக்குளியல் செய்து விட்டமின் டியை சார்ஜ் செய்து கொண்டு போகும் பலரை வீட்டிற்குள் முடக்கி நோயாளியாக்குகிறீர்கள்!


 ஆனால் அங்குள்ள தலைவர்கள் சமாதிகளை மட்டும் திறந்து வைக்கிறீர்கள். ஒட்டுமொத்த கூட்டமும் அங்கு அலைமோதுகிறது. அடடா.. இந்த அதிகாரவர்க்கத்தின் அறிவை என்னென்பது…?


கொரானாவை வைத்து அரசியல் பிழைப்பு வேண்டாம். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்.


கொரோனா தடுப்பூசியின் ஆபத்தை உணர்த்திய விவேக் மரணம்!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)