ஐ.ஏ.எஸ்? அதிகாரிகள் நேற்று இரவே ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம்.

 


தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவு முடிந்த பிறகு உற்சாகத்தில் இருக்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள். அதே நேரம் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. கொரானா அச்சம் காரணமாக வாக்குபதிவில் மந்த நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கடந்த தேர்தலை போலவே 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவு வாக்குபதிவு நடந்துள்ளது. நகர் புறங்களை விட கிராமங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்த போது எந்த கட்சிக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது என்கிற கணிப்புகளும் சத்தமில்லாமல் நடந்துவந்தது.

தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதே போல் சேலம் எடப்பாடியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் உள்ள அ.தி.மு.க வின் வியூக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு தி.மு.க எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்கிற கருத்துகணிப்பையும் நடத்தியது.

அந்த ரிப்போர்ட் நேற்று மாலையே ஸ்டாலின் வசம் ஐ-பேக் கொடுத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக ஐ-பேக் நிறுவனம் கொடுத்த ரிப்போர்டில் 180 தொகுதிகள் வரை தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என்று சொல்லியிருந்தனர். 

ஆனால், தேர்தல் முடிவுக்கு பிறகு ஐ-பேக் நிறுவனத்தின் கணிப்பில் முன்பு கணித்ததைவிட அதிக தொகுதிகளை உறுதியாக தி.மு.க கூட்டணி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த ரிப்போர்ட் ஸ்டாலின் கைக்கு கிடைத்தப்பிறகு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார். தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் இந்த விவரங்களையும் ஸ்டாலின் தரப்பு பகிர்ந்துள்ளனர்.

அதே நேரம் அ.தி.மு.க தரப்பில் நடந்தப்பட்ட தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் அந்த கட்சிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது. 

ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு மூத்த அமைச்சர்களே பலரும் தோல்வியை தழுவ வாய்ப்பள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். அந்த கூட்டணியில் போட்டியிடும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும், அ.தி.மு.க மட்டும் இருபது முதல் முப்பது தொகுதிகள் வரை உறுதியாக வெல்லும் என்கிற கருத்துகள் முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் அ.தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. அதே நேரம் தி.மு.க தரப்பில் ஆட்சியை பிடித்தவுடன் அமைச்சர்கள் யாரெல்லாம் என்கிற வரை திட்டங்களை தயார் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேற்று இரவே ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்