‘தாமரை’ சின்னத்துக்குவாக்களிக்க மறுத்தவர்களின் வீடுகளைச் சூறையாடிய பா.ஜ.க-வினர் - தேர்தலன்றே அராஜகம்!

 


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும்போது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.வினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்தனர்.

இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் இரவு நேரத்தில் திட்டக்குடி பகுதியில், பா.ஜ.கவுக்கு வாக்களிக்க மறுத்தவர்களின் குடியிருப்புகளை பா.ஜ.கவினர் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்திற்கு சென்றபோதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று கிராமநத்தம், காந்திநகர் பகுதியில் இருக்கும் மக்கள் வாக்குச்சாவடிக்கு வரும்போது பா.ஜ.கவுக்குதான் ஓட்டுப்போட வேண்டும் என பா.ஜ.கவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது, வாக்காளர்கள் நாங்கள் பா.ஜ.கவுக்கு ஓட்டுப்போடமாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் வாக்குப்பதிவு முடிந்தவுடன், இரவு நேரத்தில் அப்பகுதியில் புகுந்து பா.ஜ.கவுக்கு வாக்களிக்க மறுத்தவர்களின் குடியிருப்புகளைச் சூறையாடினர்.

மேலும் அப்பகுதியினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா