அமித்ஷா அதிரடி ஆர்டர்-எனக்குத் தேவை ரிசல்ட்!

 


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பியிருந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் நிலவரம் குறித்த அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டேயிருந்தார். அமித்ஷாவிடம் தமிழகம் குறித்து அவர் விவாதித்தபோது,’’கிடைக்கிற தகவல்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் தாமரையை மலர வைத்தாக வேண்டும்’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.


தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஏற்கனவே பல வியூகங்களை வகுத்து கொடுத்திருந்த அமித்ஷா, பிரதமர் மோடியின் அழுத்தங்களுக்குப் பிறகு,’’"என்னவேனாலும் பண்ணிக்கோங்க; ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருக்கணும்' என்கிற உத்தரவை மட்டும் தமிழக டீமிற்கு பாஸ் செய்திருந்தார். குறிப்பாக, "தேர்தல் ஆணையம், மத்திய உளவுத்துறை, காவல்துறை ஆகிய 3 அதிகார அமைப்புகளிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவின் மறைமுகப் பொருள்' என்கிறது பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் வட்டாரம்.

துகுறித்து மேலும் விசாரித்தபோது, "தமிழகம் பெரியார் மண்; சுயமரியாதை பூமி. இங்கு, பா.ஜ.க.வின் தந்திரங்கள் செல்லாது என்கிற தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் அழுத்தமான பதிவுகளை உடைக்கவேண்டும்' என்பதே மோடி -அமித்ஷா -ஜே.பி.நட்டா ஆகிய மூவர் அணியின் கனவு. அதற்கேற்ப, கடந்த 2 மாதங்களாக பல்வேறு மறைமுக திட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. குறிப்பாக, பல தொகுதி களில் ஆர்.எஸ்.எஸ். குழு களமிறக்கப்பட்டது.

 

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு பிடித்து தங்கும் அவர்கள், பெட்டிக்கடை கள், டீக்கடைகள், சலூன் கடைகள் உள்பட சாமானியர்கள் கூடும் இடங்களில் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலானவர்கள் கூடும் நவநாகரிக இடங்கள்வரை ஊடுருவி அரசியல் பேசினர். நடுத்தர வர்க்கத்தினரிடம் மூளைச்சலவையும் செய்தார்கள். இதன்பலன் என்னவென்பதை அறிந்து டெல்லிக்கு தகவல் தந்தபடி இருந்தது மத்திய உளவுத்துறை.

அதன் ரிசல்ட்டுகள் பாசிட்டிவாக இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்ய என்னென்ன வேண்டும் என பொறுப்பாளர்களிடம் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. அப்போது, ஐந்து அம்சங்கள் கொண்ட ப்ளான்கள் போடப்பட்டு அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்டது. அதாவது, மிகப்பெரிய கட்டிடம் கட்டும்போதோ அல்லது நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின்போதோ போடப் பட்டும் ப்ராஜெக்ட் எஸ்டிமேட் மாதிரி ப்ளான்கள் போட்டப் பட்டிருந்தன. அதிலுள்ள ஒவ்வொரு விசயமும் எதற்கானது? என விசாரிக்கும்படி நட்டாவிடம் சொல்லியிருந்தார். அதனை முழுமையாக விசாரித்து ரிப்போர்ட் தந்திருந்தார் நட்டா.

 

அதன்படி, அவைகளுக்கு அனுமதியளித்த அமித்ஷா, அதற்கான உதவிகளைச் செய்யுமாறு உளவுத்துறையிடமும் அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில், இந்த தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணிகள் அனைத்திலும் பா.ஜ.க. ஸ்கோர்பண்ணியிருந்தது. ஆனால், இவைகள் எதுவுமே திராவிட கட்சிகளுக்குத் தெரியக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது டெல்லி.

 

இந்தநிலையில்... கடந்த 2-ந் தேதி இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை மதுரையில் துவக்கிய பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேர்தல் நிலவரம் குறித்து கேட்க, "கருத்துக் கணிப்புகள்தான் பயமுறுத்துகின்றன' எனச் சொல்லி சோகமாகியிருக்கிறார் எடப்பாடி. அப்போது அவருக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி, "கருத்துக் கணிப்புகளால் தி.மு.க. உற்சாகத்தில் இருக்கட்டும். கணிப்புகள் மீது கவனம் வைக்காமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மட்டும் பேசுங்கள்' என அட்வைஸ் செய்திருக்கிறார். அப்போது, "அதனைத்தான் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்' எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி

 

 

இந்தச்சூழலில், தமிழக பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மோடியிடம், மார்ச் 30 மற்றும் 31-ந் தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட் காட்டப்பட்டது. அதில், தாமரை ஒரு இடத்திலும் மலரவில்லை. அதனைத் தொடர்ந்துதான் அமித்ஷாவிடம், பிரதமர் மோடி ரிப்போர்ட்டின் சாரம்சத்தை சுட்டிக்காட்டிவிட்டு, "எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 தாமரைகளையும் மலர வைத்தாக வேண்டும்' எனச் சொல்ல... அதன் பிறகே, "என்ன வேணாலும் பண்ணிக்கோங்க; எனக்கு ரிசல்ட் முக்கியம்' என தமிழகத்திற்கு தகவல் பாஸ் பண்ணினார் அமித்ஷா''‘என்று தெரிவித்தனர் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் குழு.

இதற்கிடையே, "ஸ்டாலின்தான் வர்றாரு' என்கிற ஸ்டிக்கர், ப்ளக்ஸ் பேனர்கள் அனைத்தும் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள ஈவன் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு தி.மு.க. கொடுத்துள்ள விளம்பர ஆர்டர்கள் பற்றிய புகார்கள் அமித்ஷாவிற்குப் போயிருக்கிறது.

தவிர, தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் பல தொழிலதிபர்களிடமும் தி.மு.க. தரப்பில் தேர்தல் நிதி பெற்றிருப்பதாகவும், அதனை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் கையாளுகிறார் என்பதையும் சம்மந்தப்பட்ட தொழிலதிபர்களே பிரதமர் மோடிக்கு தகவல் பாஸ் செய்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான், கடைசி 4 நாட்களில் களத்தில் பணத்தை இறைக்க தி.மு.க. திட்டமிடுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவது நல்லது எனவும் தமிழக பா.ஜ.க. தரப்பிலிருந்தும் டெல்லிக்கு தகவல்கள் போனது. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய சில இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது வருமானவரித்துறை. இந்த ரெய்டுக்கான உத்தரவை மோடியும் அமித்ஷாவும் கொடுத்துவிட்டுத்தான் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்ய தமிழகத்திற்கே வந்தனர். மே 2-ந் தேதி சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க.வை வீழ்த்த என்னதான் பா.ஜ.க. திட்டமிட்டாலும் அதன் முகத்தில் கரி பூசப்படும் என்பதைத்தான் ரெய்டில் எதுவும் சிக்காத சூழல் காட்டுகிறது. இது, தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் தி.மு.க.வின் இரண்டாம்நிலை தலைவர்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)