ஓபிஎஸ் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக நபர் கைது

 


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த நபரிடமிருந்து ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூரில் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை துணைமுதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகேயுள்ள தேனி மாவட்ட அம்மா பேரவைப் பொருளாளர் குறிஞ்சிமணி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் 11வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக கட்சியைச் சேர்ந்த சித்தரஞ்சனிடம் இருந்து ரூ.1.5 லட்சத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image