தமிழக உயரதிகாரிகள் தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன்,டி.ஜி.பி. திரிபாதி, தமிழக உள்துறை இணைச் செயலாளர் முருகன் திடீர் டெல்லி பயணம்

 


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், முடிவுகள் எப்படி இருக்கும் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விவாதித்துக் கொள்கிறார்கள். ஆட்சி மாற்றம் நிகழுமா? என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பிலும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது

இந்த நிலையில், தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலர் பிரபாகர், தமிழக டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் இன்று (09.04.2021) காலையில் திடீரென டெல்லிக்குப் பயணப்பட்டுள்ளனர். உயரதிகாரிகளின் இந்தப் பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி. திரிபாதி, தமிழக உள்துறை இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இதனையடுத்து, இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசின் தலைமை செயலாலர் ராஜுவ் ரஞ்சன், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் ஆகிய இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நான்கு பேர், திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பாக உள்ளது. மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவர்கள் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய உயரதிகாரிகள் 4 பேரை டெல்லி அழைத்திருப்பதன் பின்னணி குறித்து விசாரித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.