சென்னை வேளச்சேரி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்த போது அடிதடி - பரபரப்பு வீடியோ

 சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெசன்ட்நகர் திடீர் நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு நித்யா, கார்த்திகை பிரியா என்ற பெண்களிடம் ரூ.500 கொடுத்து வாக்கு கேட்டபோது


அதிமுகவை சேர்ந்தவர்களான அந்த பெண்களுக்கும் பணம் பட்டுவாடா செய்தவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆணும் பெண்ணும் அடித்துக்கொண்டனர். அப்பொழுது பெண்ணின் ஆடை கிழிந்தது.

பணம் பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த 181-வது வட்டம் அம்மா பேரவை துணை வட்ட செயலாளர் ஆல்பட் என்பவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க ரூ.500 ரூபாய் கொடுத்த போது நாங்கள் காலம் காலமாக இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுகிறோம் ஓட்டுக்கு பணம் எதற்கு கொடுக்கிறாய் என பெண்கள் கேட்டதாகவும் இதனால் இருதரப்பினர்க்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய் தகராறு சிறிது நேரத்தில் கைககளப்பாக மாறியதால் அங்கு கூச்சல் குழப்பம் என ஒரு பதற்றம் நிலவியது.

இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த ஆணும் பெண்ணும் அடித்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறு குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காவல் நிலையத்திலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் எதுவும் அளிக்காதபடி சமரசம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.