ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்;முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..

 


ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து விவாதிப் பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (ஏப்.26) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா 2-வது அலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமி்ழகம் உள்பட 11-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிக வேகமாக தொற்று அதிகரித்து நிலையில், சிகிச்சையளிக்க மருத்துவமனைகளுக்கு  ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம் என்றும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஆலை நிர் வாகம் கோரியது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதுபற்றி தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்டெர் லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகக்கூட திறக்கக்கூடாது என்று தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம் மற்றும் கரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து விவாதிப் பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கைப்பற்றி ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளலாமா என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப் பதாக தெரிகிறது.

இதில் விவாதிக் கப்படும் விவகாரம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப் படுகிறது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப் பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)