இறந்தவரின் உடலை ஆட்டோவின் மீது கட்டி எடுத்துச் சென்ற பரிதாபம்;வைரல் வீடியோ…

 


பிரதமர் மோடியின் வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் ஆட்டோவின் மீது வைத்து  கட்டி எடுத்து செல்லும் அவலம்  அரங்கேறி உள்ளது.

ஒரு நாட்டின் பிரதமர் தொகுதியின் நிலைமையே இவ்வளவு மோசமாக உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது.  தற்போது பரவி வரும் 2வது அலை, கடந்த ஆண்டைவிட வேகமாகவும்  வீரியமாகவும் உள்ளது. இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை மட்டுமின்றி, தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் போன்றவையும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, மயானங்களில் பிணங்கள் எரியுட்டுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சில பகுதிகளில் டோக்கன் போடப்பட்டு சில மணி நேரம் காத்திருக்கும் அவலங்கங்களும் ஏற்பட்டுள்ளது, குஜராத், உ.பி, உள்ளிட்ட வடமாநிலங்களில் சடலங்கள் சாலையோரங்களிலும் கங்கை ஆற்றின் கரையோரங்களிலும் எரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தவறியாதாக மத்திய அரசு மீதும், தொற்று பரவல் தீவிரமாக இந்திய தேர்தல் ஆணையம் காரணம் என்றும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையியில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், ஆட்டோ ஒன்றின் மீது  சடலத்தை கட்டி எடுத்துச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்காமல் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியாவின் நிலைமை இவ்வளவு கேவலமாகவும், கேள்விக்குரியதாகவும் இருப்பதாக சாடியுள்ளனர்.