வாகன பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவம்: இருதரப்பினர் மீது பாஜக வழக்குப் பதிவு

 

https://youtu.be/J4ZxCb_qLrAகோவை டவுன்ஹால் பகுதியில் பாஜகவினரின் இருசக்கர வாகன பேரணியின்போது தகராறு ஏற்பட்டு கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு தரப்பு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது கோவை புலியகுளம் பகுதியில் இருந்து பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

பேரணி டவுன்ஹால் பகுதியை கடக்கும்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய சில இரு தரப்பையும் சேர்ந்தவர்கள்மீது 4 பிரிவுகளின்கீழ் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.