கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற மகனை ஆரத்தழுவிய தாய்

 


ராமநாதபுரம்  மாவட்டம்  ஓம் சக்தி நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது,  ஆட்டோ ஓட்டிக்கொண்டே பல்வேறு சேவை செய்ததால் டாக்டர் பட்டம் கிடைத்தது. இதனால், தனது மகனை அள்ளி அணைத்து முத்தமிட்ட தாயின் நெகிழவைக்கும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்கவைத்தது.

நம்மிடம் பேசிய ஆட்டோ ஓட்டுனர் சாகுல் ஹமீது, “என் வாழ்க்கையிலே டாக்டர் பட்டம் கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்காத அளவிற்கு இந்த சேவைக்காக கிடைத்துள்ளது. உலக அமைதி பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த பட்டம் சென்னையில்வைத்து கொடுத்தார்கள். இந்த, நேரத்தில் இறைவனுக்கும் என் பெற்றோருக்கும் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் அம்மாவிடம் சொன்னதற்கு, நான் ஏதோ விளையாடுகிறேன் என்று முதலில்  நினைத்தார்கள். அதற்குப்பிறகு, அவர்கள் அடைந்த சந்தோஷத்தை பார்த்து என் கண் கலங்கியது. எனது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியடைந்தார்கள். எங்கள் வம்சத்திலேயே முதன்முதலாக டாக்டர் பட்டம் வாங்கியது நான்தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டாக்டர் பட்டம் பெற்றதைப் பார்த்து பூரிப்படைந்த  சாகுல் ஹமீதுவின் தாயார் தௌலத் நிஷா நம்மிடம், ”நானும் என் பையனும்தான் சென்னைக்கு போயிருந்தோம். அவருக்கு, இந்த மாதிரி கோட்டு போட்டு தொப்பி வெச்சு டாக்டர் பட்டம் கொடுத்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு அந்த தருணத்தை சொல்லவே முடியல. ஆனந்தக் கண்ணீர் தான் இருந்தது.

ஒரு ஆட்டோ டிரைவர், இந்த 10 வருடத்தில் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நட்டு எல்லாருக்கும் முன்னுதாரணமாக விளங்கியதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கியுள்ளார்கள். எனக்கு  என்ன சொல்றதுன்னே தெரியல. இது, என் மகனை ஊக்கப்படுத்தி இன்னும் நிறைய பண்ணணும், அப்படிங்கற ஒரு உந்துதல் சக்தியாதான் நான் இந்த விருதைப் பார்க்கிறேன்” என்றவர் தன் மகன் சாகுல் ஹமீதுக்கு மெடலை அணிவித்து அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)