எட்டு மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சி

 


சென்னையை அடுத்த பல்லாவரத்தில் எட்டு மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்த கீதா என்ற கர்ப்பிணி வீட்டிற்கு வெளியே இருக்கும் சாமியை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென கர்ப்பிணியை பிடித்து இழுத்து சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். 

அப்போது, சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், கர்ப்பிணிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சத்தம் போட்டதால், செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர்கள் தப்பியோடினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார், செயின் பறிக்க முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.