மு.க.ஸ்டாலினின் நிழல்.. கார்ப்பரேட் மூளை - சபரீசன் ரெய்டு பின்னணி

 


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் வருமானவரிச் சோதனையின் மூலம் மீண்டும் தலைப்பு செய்தியாகி இருக்கிறார் சபரீசன். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் தான் இந்த சபரீசன். 

அரசியலில் ஸ்டாலினின் நிழல் போல் வந்துக்கொண்டிருப்பவர். சபரீசனுக்கு சொந்தமான நீலாங்கரை இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 5 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

தி.மு.க தலைவராக உள்ள ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று அரும்பாடு படுபவர்களில் சபரீசன் முதல் வரிசையில் இருக்கிறார். 2014-ல் இருந்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 


தி.மு.க.வில் கார்ப்பரேட் பாணியை அறிமுகப்படுத்தியது சபரீசன் தான். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் நமக்கு நாமே பரப்புரை அதிகம் பேசப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தது இந்த சபரீசன் தான். 


தி.மு.க-வுக்காக இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் டீம் பணியாற்றி வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது இந்தப்பணியை மேற்கொள்ள சுனில் என்பவர் அழைத்து வந்தார் சபரீசன்.


திண்ணைப்பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் என கிடைத்த மேடைகளில் தனது கரகரத்த குரலில் கட்சியின் கொள்கையை விளக்கி மக்களை அரவணைத்த கலைஞர் கருணாநிதி சுனில் எண்ட்ரிக்கும் தடை விதித்தார். வேறு வழியின்றி ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வியூக அமைப்பாளராக சுனில் பணியமர்த்தப்பட்டார். 


ஸ்டாலின் சைக்கிள் பயணம், உழவர் சந்தை விசிட், டீ க்கடை விசிட் என நமக்கு நாமே பிரசாரத்தின் பின்னணியில் இருந்தது சபரீசன் டீம் தான். 


அந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் சுனிலுக்கு தி.மு.க-வுக்கும் இடையேயான உறவு நன்றாகத் தான் இருந்தது.


பிரசாந்த் கிஷோர் டீம்ல தான் சுனில் வேலைபார்த்து வந்துள்ளார். ஐபேக் டீம் இங்கு களம் காண சுனில் இங்கிருந்து விலகி அ.தி.மு.க-வுக்கு சென்றுவிட்டார்.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு சர்வே முடிவு வெளியானது. அதாவது தி.மு.க வேட்பாளராக யாரை முன்நிறுத்துவது என்பது அந்த சர்வே. 


அதில் அன்றைய தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 30% சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 60 சதவீதம் பேர் ஆதரவளிப்பதாக ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இதன் பின்னணியில் சபரீசன் இருப்பதாக அப்போது முனுமுனுக்கப்பட்டது. கலைஞர் இருக்கும்போதே இந்தக்காட்சிகள் எல்லாம் அரங்கேறியது. தி.மு.கவின் பல அசைமெண்டுகளை கச்சிதமாக முடித்துக்கொடுத்து ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பவர் சபரீசன்.


சபரீசனுக்கு சில இடங்களில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அதற்கு மாற்றாக எதையாவது செய்து ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்துவிடுவார். அதற்கு ஒரு சான்று மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சிலை அமைக்க முடிவு செய்து அழைப்பிதழ் எல்லாம் அடிக்கப்பட்டது. 


ஆனால் சிலையை யாரைக் கொண்டு திறப்பது என்பதில் சிக்கல் எழுந்தது. அரசியல் சீனியரான ஒரு நபர்தான் சிலை திறந்து வைக்க வேண்டும் என தி.மு.க தரப்பு உறுதியாக இருந்தது. இந்த அசைமெண்ட் சபரீசனுக்கு கொடுக்கப்பட்டது. அமித்ஷாவை அழைத்து வர டெல்லி சென்று அது முடியாமல் போனது. இதன்காரணமாக ஸ்டாலின் அப்செட்.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா அந்த சமயத்தில் பொறுப்புகள் அனைத்தையும் ராகுலிடம் கொடுத்துவிட்டு ஓய்வில் இருந்தார். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவரை தொடர்பு கொண்டு அதுவும் சரியாக அமையவில்லை. ஆந்திராவில் தேர்தல் பரப்புரைக்காக சோனியா வரும் தகவலை அறிந்த சபரீசன் அதனை காரணமாக வைத்து கலைஞர் சிலையை சோனியா திறக்க தேதி வாங்கினார். இதனால் ஸ்டாலின் ஹேப்பி. நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது.


கிச்சன் கேபிணட்டில் இருந்த சபரீசன் 2018-ல் சோனியா, ராகுலுடன் எடுத்த புகைப்படம் சீனியர்களுக்கே சற்று ஷாக் கொடுத்தது. கலைஞரின் மனசாட்சியாக செயல்பட்ட மாறன் அவர்களின் வாரிசுகளுக்குதான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. டெல்லி அரசியலில் சபரீசன் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாரா என்ற பேச்சும் அப்போது எழுந்தது. கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு என்பதில் மாறன் சகோதரர்களுக்கும் சபரீசனுக்கு இடையே மோதல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நேரம் வரட்டும் எனக் காத்திருக்கின்றனர் மாறன் சகோதரர்கள். ஸ்டாலின் நிழலாக பார்க்கப்படும் சபரீசன் சொந்தமாக இடங்களில் நடக்கும் ரெய்டுகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.


“தேர்தலுக்கு 3 நாள் இருக்கும் நிலையில், ஐ.டி ரெய்டு நடத்தி மிரட்டி அச்சுறுத்தி வீட்டில் முடக்கி வைத்துவிடலாம் என நினைக்கிறார்கள் அது தி.மு.க-வினரிடம் நடக்காது. இன்னும் ரெய்டு நடத்துங்க. நீங்க ரெய்டு நடத்த, நடத்த தி.மு.க கிளர்ந்து எழும்” என அரியலூர் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் முழங்கியுள்ளார்.


'மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். அடக்குமுறைக்கு தி.மு.க ஒருபோதும் அஞ்சியது கிடையாது. மகள் வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)