மாஸ்க் அணியவில்லை; கடைக்காரரின் மூக்கை உடைத்த அரசு அதிகாரியால் பரபரப்பு..

 


சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டில் மாஸ்க் அணியாத கடைக்காரர் ஒருவரின் மூக்கை அரசு அதிகாரியின் உடன் வந்த நபர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிஎப் காலனி  பகுதியில் அதிகாரிகள் கட்டுபாடுகளை  பின்பற்றாத  கடைகளுக்கு  அபராதம் விதித்து  வந்தனர். அப்போது அந்த  பகுதியில் ஒரு  ஜவுளிக் கடைக்கும், அரிசிக்கடைக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கடை உரிமையாளர்கள் மாஸ்க் அணியவில்லை என்பதால் அபராதம் விதித்தனர். தற்போது கொரோனா காலம் என்பதால் வியாபரம் இல்லை என்றும், அதனால் அபராத தொகையை குறைத்துக் கொள்ளுமாறு அரிசி கடை  நடத்திவரும் தமிழக  வணிகர் பாதுகாப்பு  பேரவையின்  அம்பத்தூர்  தொகுதி செயலாளர்  லட்சுமணன் கேட்டுக் கொண்டார்.

அப்போது அவருக்கும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்  பாரதிராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாரதிராஜா உடன் வந்த நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து அரிசி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.

இவை அனைத்தும்  அந்த கடையில்  பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  லட்சுமணனின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக கடை  உரிமையாளர்கள்  லட்சுமணனை மீட்டு  மருத்துவமனையில்  சேர்த்தனர். மேலும் அடாவடியாக நடந்து கொண்டு அரசு அதிகாரி மற்றும் உடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)