பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்” - பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!


 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தோல்வி பயத்தில் பிரசாரத்தின்போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

நேற்று கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை “தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். தேர்தல் ஆணையத்தைப் பார்த்தெல்லாம் பயப்படமாட்டேன்.” என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார்.

நேற்று பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். இதையொட்டி பா.ஜ.க-வினர் பேரணி நடத்தினர். அப்போது கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளைத் தாக்கினர்.

வியாபாரிகளைத் தாக்கிய பா.ஜ.க குண்டர்களை தடுக்க முயன்ற போலிஸாரையும் அவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மசூதிக்கு அருகே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

தேர்தல் பிரசாரத்தின்போதே மத வெறுப்பைத் தூண்டி, சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான பா.ஜ.க-வின் அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் தி.மு.க வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஒரு தொகுதியில் வென்றாலும், உ.பி, குஜராத் போல தமிழகத்தை வன்முறைக் காடாக்கிவிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்