நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்கள்கைரேகை முறையை ரத்து செய்ய வேண்டும் - ஊழியர்கள் போராட்டம்

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தகுதியுள்ள விற்பனையாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிய பின் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்,

அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் 4ஜி விற்பனை முனையம் வழங்கப்பட வேண்டும், பழுது ஏற்பட்டால் பழுது நீக்கும் செலவை துறையே ஏற்க வேண்டும், கோவிட்19 இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் சூழ்நிலையில் கைரேகையை ரத்துசெய்து கண் விழித் திரையின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வழங்கப்படும் அரிசியினை தரமானதாகவும் சரியான எடை போட்டு வழங்க வேண்டும், பணிவரன்முறை பயன்படுத்தாத பணியாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து பணியாளர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் கூட்டுறவு சங்கத்திற்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி சமூக இடைவெளியுடன் முக கவசங்களை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் - சதீஷ் அண்ணாமலை

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)