கடைசி நேரத்திலும் நாடகமாடிய எஸ்.பி.வேலுமணி... வீடியோ வெளியானதால் அம்பலமானது திட்டம்!

 


பெண்ணின் காதில் இருந்து கம்மலை திருடிவிட்டார்கள் என தி.மு.கவினர் மீது எஸ்.பி.வேலுமணி பழிபோட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண் கம்மலை கழட்டி பத்திரமாக வைத்த வீடியோ வெளியானது. அதிகார போதையில் எஸ்.பி.வேலுமணியின் நாடகம் அம்பலத்தில் ஏறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.

தி.மு.கவின் வெற்றி பிரகாசமாக இருக்கும் நிலையில் கதிகலங்கிப்போன எஸ்.பி.வேலுமணி தனது தொகுதிக்குள்ளேயே முடங்கிப்போனார். 20 தொகுதிகளுக்கு பொறுப்பை ஏற்ற எஸ்.பி.வேலுமணி இறுதியில் தான் மட்டுமாவது வெற்றிபெற வேண்டும் என எந்த தொகுதிக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அதிகார வெறி கொண்ட எஸ்.பி.வேலுமணி, மக்களை பணம் கொடுத்து வாங்க கடுமையாக முயற்சித்திருக்கிறார். நாளுக்குநாள் தோல்வி பயம் தொற்றிக்கொள்ள தி.மு.கவினர் மீது பழிபோடும் திட்டங்களை தீட்டியும் வருகிறார்.

இதன் உச்சமாக தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கரும்புக்கடை பகுதியில் தி.மு.கவினர் அனுமதி பெற்று பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி அங்கு எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பிற்காக வந்தார். அப்போது வேண்டுமென்றே அ.தி.மு.க-வினர் தகராறு செய்ததில் மோதல் ஏற்பட்டது.

அப்போது தி.மு.கவினர் பலர் காயமடைந்தனர். அ.தி.மு.கவினர் சிலரும் காயமடைந்தாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவங்கள் அனைத்தும் அ.தி.மு.கவினரால் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருகட்சியினரிடையே மோதல் நடைபெற்ற இடத்தில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தி.மு.கவினர் பெண் ஒருவரின் காதில் இருந்த கம்மலை பறித்து சென்றும், பெண்களின் தாவணியை பிடித்து இழுத்துள்ளனர் எனவும் அபாண்டமாக குற்றம்சாட்டினார். இது அப்பட்டமான பொய் என்பதை தற்போது வெளியாகி உள்ள வீடியோ உறுதிப்படுத்தி உள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் தனது காதில் இருந்த கம்மலை கழட்டி பாதுகாப்பாக வைத்துக்கொண்டதும், இதன் பிறகே தள்ளுமுள்ளு நடைபெற்றதும் அந்த வீடியோவின் மூலம் வெளியாகியுள்ளது. தள்ளுமுள்ளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதும், அவருக்கு எஸ்.பி.வேலுமணி ஆறுதல் சொல்லும் படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வேலுமணியின் நாடகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் அதிகார போதையில் எதையும் செய்யலாம் என்கிற எஸ்.பி.வேலுமணியின் திட்டம் மேலும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றபோது பெண் ஒருவரை பங்கேற்க செய்து சலசலப்பு ஏற்படுத்தியதும், பின்னர் விசாரணையில் அவர் அ.தி.மு.க நிர்வாகி என்பதும் திட்டமிட்டே கூட்டத்திற்குள் வந்ததும், பின்னர் எஸ்.பி.வேலுமணியுடன் செல்போனில் பேசியதும் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டு காலம் என்ன செய்தோம் என்று சொல்லி வாக்குகளை கேட்க வக்கற்று அனுதாபத்தின் மூலம் வாக்குகளை பெற முயலும் அ.தி.மு.க-வினரின் செயல் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)