ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு! - என்னென்ன கட்டுப்பாடுகள்?

 


இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் இன்று 2.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 12-ம் தேதி தலைமைச் செயலர். அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஞாயிறு முழு ஊரடங்கு:

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்யாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்ரிகை விநியோகம், மருத்துவமனைகள் , மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மனி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும்,மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100க்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50க்கு மிகாமலும் நடத்துவதற்கு தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)