கணினி நிபுணர்களுக்கு அனுமதி வழங்கியது யார்?”- வேல்முருகன் புகார்!

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். பண்ருட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஆளுங்கட்சிக்கு ஆதரவான உயரதிகாரிகள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டினார்.

இதுகுறித்துப் பேசிய அவர், “பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகத்தில் கணினி நிபுணர்கள் 3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுளது. இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தோம்.

இணைய வழி கல்விக்காக மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி அளித்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் எங்கும் இணைய வழி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதற்கு அனுமதி அளித்தது யார் எனத் தெரிவிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவான காவல்துறை உயரதிகாரிகளும் முறைகேடு செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)