இரவு நேர ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் : போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை!

 


தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு  நேற்று முதல் தொடங்கியது. இதனால் பேருந்துகள் முன்கூட்டிய திட்டமிடுதலுடன் இயக்கப்பட்டது. சென்னையில் மட்டும் இரவு ஊரடங்கின் போது  2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் “போலீஸ் வாக்கி டாக்கி” மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். “இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள், அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதனை கண்காணியுங்கள்” என்று கூறியுள்ளார். 

மேலும், மருத்துவ தேவை, மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் அவர்களை செல்ல அனுமதியுங்கள். தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று போலீஸ் வாக்கி டாக்கி  மூலமாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)