வேதாந்தாவின் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..

 


ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதுநாள் வரை விசாரித்தது.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை முழுத்திறனுடன் இயக்க, பயிற்சி பெற்ற, குறைந்தபட்சம் பத்தாண்டு துறைசார் அனுபவம் உள்ள 45 நபர்கள் தேவை. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.2 கோடி பராமரிப்பு செலவாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் அமைப்பின் கண்காணிப்பின்கீழ், தெரிவிக்கப்படும் காலம் வரை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை வேதாந்தா நிறுவனம் ஏற்று நடத்தத் தயாராக உள்ளது என தெரிவித்து வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு விசாரிக்கிறது.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image