வேளச்சேரி 92-வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த தும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. 

சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள சீதாராம் நகர் டிஏவி பள்ளியில் 92-வது ஆண்கள் வாக்குச் சாவடியில் இருந்து 2 மின்னணு இயந்திரங் கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவி பாட் இயந்திரத்தை விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விசாரணையில் விவிபாட் இயந்திரத்தில் மட்டும் 15 வாக்குகள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த வாக்குச்சாவடியில், 548 ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். 

வேளச்சேரி தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நேற்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி முன்னிலையில், மின்னணு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்குப்பதிவு அலு வலர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாலை 5.30 மணி அளவில் திருவான்மியூரில் இருந்து வாக்குப்பதிவுக்கான இயந்திரங் கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற் பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி பார்வையிட்டார்.

இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிக்கு முடிகிறது. 

மறுவாக்குப்பதிவு நடப்பதை முன்னிட்டு, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீலிடப் பட்டு, வேளச்சேரி தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)