9க்கு தொடங்கி 10க்கு தாம்பரத்தில் நிறுத்திடுவீங்களா? பயணிகள் கேள்வியால் போக்குவரத்து கழகம் முடிவு!

 


கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எதுவும் இயங்கக் கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
அதனால் இரவு நேரங்களில் பேருந்து போக்குவரத்து சேவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு பதிவு செய்திருந்த பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ள போது சென்னை கோயம்பேட்டில் இருந்து 8 அல்லது 9 மணியளவில் பேருந்துகள் இயங்கி தொடங்கி 10 மணியளவில் தாம்பரத்தை தாண்டினால் பாதியில் இறக்கிவிட்டிடுவீர்களா என பயணிகள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாலை 4 முதல் இரவு 8 மணி வரையில் கூடுமான வரையில் அதிகளவி பேருந்து சேவைகளை இயக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணங்களை திரும்பி செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர பேருந்துகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)