அதிமுக வேட்பாளர் கிடங்கில் ரூ.84 லட்சம் பறிமுதல்

 
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கட்டுமான கிடங்கில் விடிய விடிய நடத்திய தோசனையில் ரூ.84 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பகுதியில் வசந்த் அவன்யூவில் ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் சுகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டுமான கிடங்கில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகாவத் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி இருந்த ரூ.84 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.  பறிமுதல் செய்த பணத்தை காவல் துறையினர் கைப்பைகளில் எடுத்துச் சென்றனர்.

பறிமுதல் செய்த ரூ.84 லட்சம் பணத்தை கைப்பைகளில் எடுத்துச் செல்லும் காவல் துறையினர்.

மேலும், ஆந்திரம் மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வைத்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தகவலை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதில் மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆந்திரா இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கட்டுமான கிடங்கில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் ரூ.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்