’ஒரேநாளில் பிறந்ததினம்’: 7 வயதில் விவேக் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த இந்திரா காந்தி

 தனக்கும், இந்திராகாந்திக்கும் பிறந்த தினம் ஒரேநாள்தான் என குன்னூர் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும்போது, விவேக் எழுதிய கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி பதிலனுப்பியிருந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் படித்த நடிகர் விவேக், இந்திரா காந்திக்கும் விவேக்கிற்கும் ஓரே நாள் பிறந்த தினம் ஏன்று தனது தந்தை கூறியதை அடுத்து  அப்போது தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தனது தந்தை ஓப்புதலோடு பாரத பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.

கடந்த 1969ஆம் ஆண்டு குன்னூர் ஓட்டுப்பட்டறையில்  உள்ள சாந்தி விஜய் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, தனக்கும் இந்திரா காந்திக்கும் ஓரே நாள் பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதத்திற்கு இந்திரா காந்தி தனது கைப்பட எழுதி பதில் அனுப்பியதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் அவர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு