முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் காயம்...பரபரப்பு!
முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்டிலான் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று வாக்களிப்பதற்காக சென்ற வாக்காளர்களான தாமோதரன், புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது சமுதாயக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு கொண்செல்லப்பட்டு சிகிச்சை அளித்து பின்னர் வீடு திரும்பினர்