கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


இந்தியாவின் கொரோனா பரவலில் 2ம் அலை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய உயர்வை சந்தித்துள்ளன. மேலும் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன என்பது குறித்து மாநில சுகாதாரத்துறைகள் அறிவித்துள்ளன. அதன்படி நாட்டிலேயே அதிக அளவாக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிராவில் இன்று புதிய உச்சமாக 68,631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 503 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,70,388 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 31,06,828 பேர் குணமடைந்துள்ளனர், 60,473 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனே மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 12,707 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 116 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புனேவில் மட்டுமே சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,03,620 ஆக அதிகரித்துள்ளது, அங்கு இதுவரை 11,428 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் அதிகரித்த கொரோனா:

இதே போல நாட்டிலேயே அதிக பாதிப்பை சந்தித்துவரும் மற்றொரு மாநிலமான டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 25,462 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் 161 பேர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ட்விட்டரில் தெரிவித்திருந்ததுடன் வழக்கமான சப்ளையைவிட தற்போது டெல்லிக்கு அதிக ஆக்ஸிஜன் சப்ளை தேவைப்படுவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,723 பேருக்கு புதிதாக கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 5,925 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த  18 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்