மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்;50% கட்டணம் தள்ளுபடி..
தமிழ் புத்தாண்டு மற்றும் யுகாதியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க இன்று (13.04.2021) மற்றும் நாளை 50 சதவீதம் கட்டண தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை,அவ்வப்போது சில தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட சமயத்தில் சில நாட்கள் இலவசமாக பயணிப்பதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது 50 சதவீத கட்டணம் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.