சிறையில் கைதி கொலை; 4வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

 


பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கடந்த 22-ஆம் தேதி சிறைவாசிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்து மனோ என்ற கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு எட்டாத நிலையில் உயிரிழந்த முத்து மனோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வாகை குளத்தில் ஊர் மக்கள் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் நான்காவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நீதிமன்ற காவலில் இருந்த குற்றவாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 மாஜிஸ்ட்ரேட் கடற்கரை செல்வம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த முத்து மானோவின் தந்தை பாபநாசம் மற்றும் உறவினர்கள் 5 பேரிடம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து சம்பவம் தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் நேரடியாக விசாரணை நடத்தினார்.

மேலும் கொலை சம்பவத்தின் போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடனிருந்த கைதிகள், பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்கள், சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவை குறித்தும் மேஜிஸ்ட்ரேட் விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே, விசாரணையின் அறிக்கையில் கொடுக்கப்படும் தகவல் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக நெல்லை மாவட்டம் வாகைகுளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உயிரிழந்த முத்து மனோவின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)