வாக்கு எண்ணிக்கை மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் 4 அடுக்கு பாதுகாப்பு...

 


திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் எண்ணப்படுகின்றன.

கொரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கையாக வழக்கத்தை விட கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளின் வாக்குகள் - திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகள் - பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதிகள் - சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் துறையூர், முசிறி தொகுதிகள் துறையூர் இமயம் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்படுகின்றன.

இந்த மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு காவல் துறை, துணை ராணுவப் படை, சிறப்புக் காவல், ஆயுதப்படை போலீசார் 4 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்களைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஸ்ட்ராங் ரூம் என்று சொல்லப்படுகிற அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்து,  பூட்டி முத்திரை (சீல்) வைத்துள்ளனர். இதன்படி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பூட்டி சீல் வைத்தார்.

மற்ற மையங்களில் தேர்தல்  பார்வையாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூட்டி, முத்திரையிட்டனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருச்சி மேற்கு வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் வேட்பாளருமான கே.என்.நேரு, அதிமுக வேட்பாளர் பத்மநாதன் ஆகியோர்  பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதேபோல திருச்சி கிழக்கு திமுக  வேட்பாளர் இனிகோ இருதயராஜ், மநீம வேட்பாளர் வீரசக்தி ஆகியோர் பார்வையிட்டனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)