திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணித்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்

 


திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்கச் செல்லாமல் தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5 மணி நேரம் அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மத்தியூர், மாத்திருப்பு, வாண்டையார் இருப்பு ஆகிய கிராமங்களிலா 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களில் சுடுகாடு வசதி அமைத்துத் தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி அந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்க செல்லாமல் கருப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பின்னர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் கிராம மக்களை வாக்களிக்க செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் அவர்கள் வாக்களிக்க சென்றனர். கிராம மக்கள் போராட்டத்திற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் கழித்து 1 மணிக்கு வாக்களிக்கச் சென்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)