மூன்று முன்னணி நடிகர்களான விஜய்.. அஜித்.. சேதுபதி.. தேர்தல் நாளில் சைலண்டாக சம்பவம் செய்த 3 டாப் ஹீரோக்கள்

 


சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் கோலிவுட்டின் மூன்று முன்னணி நடிகர்களான விஜய், விஜய் சேதுபதி, அஜித் மூன்று பேருமே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் வாக்களிக்கும் வேகத்தை பார்த்தால் இந்த முறை வாக்கு சதவிகிதத்தில் புதிய ரெக்கார்ட் படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 மணி வரை 53.55% பேர் தமிழகத்தில் வாக்களித்துள்ளனர். இன்று வாக்களித்த நடிகர்கள் அஜித், விஜய் சேதுபதி, விஜய் ஆகியோர் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளனர். இவர்கள் சத்தமின்றி சொல்லி சென்று மெசேஜ் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

காலையில் அஜித் வாக்களித்த போது தொடங்கிய பிரேக்கிங் நியூஸ்தான்.. இன்னும் விடவில்லை. காலை 6.55க்கே வாக்குசாவடியில் அஜித் வாக்களிக்க அதுவே பெரிய செய்தியானது. மிகவும் பொறுப்பாக செயல்பட்ட அஜித்.. கொரோனா பரவல், மக்கள் கூட்டம் அனைத்தையும் மனதில் அதிகாலையிலேயே வாக்களித்தார். நாம் வந்தால் கூட்டம் சேரும்.. கொரோனா காலத்தில் அது மக்களுக்குதான் சிக்கல் என்பதை உணர்ந்து அஜித் மிகவும் பொறுப்பாக இன்று செயல்பட்டார்.

அதோடு அஜித் கருப்பு சிவப்பு மாஸ்க் அணிந்து அஜித் வந்ததும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. தேர்தல் நாளில் வாக்கு போட வரும் போது அஜித் இப்படி மாஸ்க் அணிந்து இருந்தது தனது ரசிகர்களுக்கு அவர் அனுப்பிய சிக்னல் போல பார்க்கப்பட்டது. பொதுவாக அரசியல் ரீதியாக சர்ச்சை வந்தாலே முதல் ஆளாக அஜித் மறுப்பு அறிக்கை விடுவார்.
ஆனால் இப்போது வரை கருப்பு சிவப்பு மாஸ்க் குறித்த சர்ச்சை எதற்கும் அஜித் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அஜித் தெரிந்துதான் கருப்பு சிவப்பு மாஸ்க் போட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். கண்டிப்பாக அஜித் எதையோ மனதில் வைத்துதான் இப்படி செய்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் விஜயும் இன்று கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்தது வைரலானது.

இவர் பார்க்கில் இல்லாத காரணத்தால் சைக்கிளில் வந்தார் என்று விளக்கம் கூறப்பட்டாலும், கருப்பு சிவப்பு சைக்கிளை கொண்டு வந்தது ஏன் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். தன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடங்கி பல விஷயங்களுக்கு விஜய் இப்படித்தான் அமைதியாக பதில் (செல்பி பதிலடி) அளித்துள்ளார். இப்போதும் தேர்தல் நேரத்தில் சைக்கிள் மூலம் சைலண்ட்டாக பதில் அளித்துள்ளார் என்கிறார்கள்.

விஜய், அஜித் இருவரும் இப்படி அதிரடி காட்டிய போதே... விஜய்சேதுபதி என்ன செய்வார்.. அவரும் ஏதாவது மெசேஜ் சொல்வாரா என்று பல நெட்டிசன்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் சேதுபதி ஒருபடி மேலே போய்.. எனக்கு மனுசங்கதான் முக்கியம்.. ஜாதி மதம் முக்கியம் இல்லை. அதுக்காக வாக்களிக்க மாட்டேன் என்று நேரடியாகவே கூறியுள்ளார். வெளிப்படையாக மனதில் பட்டத்தை கூறி.. இதுதான் என் கொள்கை என்று கூறிவிட்டார்.

மொத்தத்தில் தமிழகத்தின் டாப் ஹீரோக்கள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த தேர்தலில் மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். வடஇந்தியாவில் இப்படி ஹீரோக்கள் வாக்களிப்பது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை . சல்மான், ஷாருக் வந்து வாக்களித்தால் யாரும் அதில் குறியீடு தேட மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் சைக்கிள் ஓட்டி வந்தாலே அதில் ஆயிரம் குறியீடு இருக்கும்... தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கும்.

தேர்தல் நாளில் திமுக, அதிமுக வைரலாகாமல் அஜித்தும், விஜயும்தான் இன்று வைரல் ஆனார்கள். அதிலும் விஜய் எல்லாம் இன்று தேசிய அளவில் ஹிட் அடித்துள்ளார். இதுதான் இவர்களின் உண்மையான மாஸ் .. தங்களின் அரசியல் நிலைப்பாட்டை மூன்று டாப் ஹீரோக்களும் மறைமுகமாக வெளிக்காட்டி இருப்பதாகவே நெட்டிசன்களும், இந்த நடிகர்களின் ரசிகர்களும் கருதுகிறார்கள்.

அஜித் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்.. விஜய்க்கு அரசியல் ஆசை உள்ளது.. சேதுபதிக்கோ பொது மக்கள் பிரச்சனையில் அக்கறை உள்ளது .. அதனால் இவர்கள் கண்டிப்பாக தெரிந்துதான் இப்படி சிக்னல் அனுப்பி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எதை பற்றியும் கவலைப்படாமல் மறைமுகமாக இவர்கள் தங்கள் விருப்பதை வெளிக்காட்டி இருப்பதாகவே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்களின் கருப்பு சிவப்பு குறியீடு எல்லாம் உண்மையில் அரசியல் சம்பந்தப்பட்டதா இல்லை, எதேர்ச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)