சென்னையில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

 


கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இன்று ஒரே நாளில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன.இதனால் சென்னை விமான நிலையம் தொடா்ந்து பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் நேற்றும், நேற்று முன்தினமும் ஒவ்வொரு நாளும் 18 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகின. ஆனால் இன்று அது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான பெங்களூா் விமானங்கள் 4, டெல்லி விமானங்கள் 3, மும்பை விமானங்கள் 3, இந்தூா் விமானங்கள் 2, ஹைதராபாத், நாக்பூா், புனே, சூரத், மங்களூா் மற்றும் அந்தமான் விமானங்கள் தலா ஒன்று ஆகிய 18 விமான சேவைகளும், அதைப்போல் அந்தந்த இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வரும் 18 விமான சேவைகளும் என மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகை விமானங்கள் 112, புறப்பாடு விமானங்கள் 109 இயக்கப்படுகின்றன. அவை அனைத்திலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)