சிதம்பரம் வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளருக்கு மறுப்பு ஏடிஎஸ்பிக்கு தமிழ்நாடு பிரஸ்,@மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்(3579/CNI) சார்பாக கண்டனம்

 சிதம்பரம்அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளின்  வாக்கு  பவாக்கு என்னும் மையமாக அறிவிக்கப்பட்டு அந்த தொகுதியின் உடைய வாக்குப்பதிவு இயந்திரம் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் தினமும் கண்காணிப்பு அறைக்குச் சென்று  காணொளி காட்சி மூலமாக பார்வையிட்டு வருகின்றனர். 

அவ்வப்போது வேட்பாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று (21.04.21) சிதம்பரம் தொகுதி அதிமுக  வேட்பாளர் பாண்டியன், புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழி தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்க சென்றனர். 

அப்போது பணியில் இருந்த ஏடிஎஸ்பி சரவணகுமார் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஒருமையில் திட்டி வெளியேறுங்கள் என மிரட்டினார், மேலும் அதிகார தோரணையில் வெளியே போ ஒருமையில் பேசினர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே சென்று வர எங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடும் கண்டனம் எழுப்பிய பத்திரிக்கையாளர்கள் ஏடிஎஸ்பி சரவணகுமாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்  முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுக வேட்பாளர்கள் கேட்டுகொண்டதிற்கு இனங்க போரட்டத்தை  முடித்து கொண்டனர். ஏ டி எஸ் பி யின் செயல்பாட்டுக்கு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இது குறித்து சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மாநில தேர்தல் ஆணையார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், கடலூர் எஸ்பி ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)