ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!

 



உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது, கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர். பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமலும், முக்ககவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைபிடிக்காமலும் நீராடினர்.

கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதிவரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 2,171 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனா பாதித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவை விட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடைய கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர். நாளை முதல் இப்பணி மேலும் விரைவுபடுத்தப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)