அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு


 திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அரவகுறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பரப்புரையொன்றில் பேசிய செந்தில்பாலாஜி, “திமுக ஆட்சிக்கு வந்த உடன் மாட்டு வண்டியை ஆற்றுக்கு ஓட்டலாம். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார். ஒரு வேளை தடுத்தால் என்னை அழையுங்கள். அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டார்.” என்றார்.

இந்தநிலையில் போடிநாயக்கனுரில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி “ திமுகவினரை தொட்டு பார் தம்பி. தமிழகத்தில் பாஜகவின் வேலை எடுபடாது. திமுகவினரை மிரட்ட முடியாது, நாங்க எழுந்தா தாங்கமாட்டீங்க” என்றார்.

அதனைத்தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ”செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பற்கள்லெல்லாம் வெளியே வந்து விடும். கர்நாடக முகத்தை காட்ட வேண்டாம் என நினைக்கிறேன் ” என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)