ஆவடியில் 3 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல்

 


ஆவடியில் இன்று காலை வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில், 3 மணி நேரத்தில் 12 லட்சத்து 63 யிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆவடி பகுதியில், பிரேம் என்பவரிடம் 9,500 ரூபாயும், டில்லி பாபு என்பவரிடம் 21,500 ரூபாயும், சரஸ்வதி அம்சவேணி என்பவரிடம் 82,110 ஆயிரம் ரூபாயும் என அங்குமட்டும் 1,13,110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுக தரப்பை சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு மேலாளரிடம் இருந்து 11 லட்சத்து 50 அயிரம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)