இணை நோய் இல்லாத 27 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9,000-ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 பேர் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 807 பேருக்கும், கோவையில் 652 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இரண்டாவது நாளாக 12 வயதுக்குட்பட்ட 300-க்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 65,635 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்காக சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 1,00,804 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் 9 மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் கொரொனா தொற்றால் 22 பேர் உயிரிழந்தனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு