திருச்சி மாநகர காவல் துறையால் ஒரே நாளில் ரூ. 2.34 லட்சம் கொரோனா விதிமீறல் அபராதம் வசூல்

 கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 14 இடங்களில் பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஆனாலும் விதியை மீறி முகக்கவசமின்றி சுற்றிய 1174 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய்.2,34,000 அபராதம் தொகை விதிக்கப்பட்டது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹33,500அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்