கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி - ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு!

 


கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவர் இது குறித்து கேட்டதற்கு

 உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்று பதில் சொல்லி இருந்தார்

பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்ததால் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதனையும் உத்தரகாண்ட் மாநில அரசால் கடைபிடிக்க முடியவில்லை

ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் (மகாமண்டலேஸ்வர்) கபில் தேவ் தாஸ் (65) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கபில்தேவ் தாஸ் சிகிச்சை பலனின்றி காலமானார்

 வட இந்திய இந்துக்களால் கடவுள்களின் அம்சங்களாக போற்றப்படுகிற சாதுக்களின் தலைவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.

ஹரித்வார் நகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் மிக அதிகமான உச்சகட்டமான பாதிப்பு இது

 இப்போது ஹரித்வார் புனித நகரமே பெரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்