மே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு

 


தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்தாலும் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, எக்காரணத்தை கொண்டும் மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. மேஜைகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லை, 14 மேஜைகளில் தான் வாக்கு எண்ணிக்கை உறுதி என செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும், அதில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென சில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் கட்சிகளும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக கொரனா பரிசோதனை செய்யலாமா என்பது ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் சுகாதாரத் துறை அதற்கான சுற்றறிக்கையை அனுப்பும் என்று தெரிவித்தார்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு