தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 18,000ஐ கடந்தது!

 


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களிலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமாக சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் சாதனை அளவை கடந்துள்ளது.

தமிழகத்திலும் வைரஸ் நோய்த்தொற்று சமீப நாட்களாக உச்சத்தை எட்டியிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பது என பலகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது, இருப்பினும் நோய் பரவல் கட்டுப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத உயர்வாக 18,692 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 18,692 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,37,582 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,046 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 1,15,128 ஆக உள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 5473 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் 1331 பேரும், கோவையில் 1113 பேரும், திருவள்ளூரில் 905 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)